LATEST ARTICLES
‘லெஜெண்ட்’ சரவணன் நடிக்கும் ‘லீடர்’
கமாண்டோவின் ‘லவ் ஸ்டோரி’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா
‘சிலம்பாட்டம்’ மீண்டும் வெளியாவது STR ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் : டி.ராஜேந்தர்
பிஆர்ஓ-க்களை பாராட்டி தங்க காசு பரிசு வழங்கிய ”ரெட் லேபிள்“ படத் தயாரிப்பாளர்…
‘ரெட் லேபிள்’ வருகிற பிப்.6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது..!
‘ரெட் லேபிள்’ திரைப்படம் வருகிற பிப்.6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இதில், படத்தின் கதாநாயகனும், தயாரிப்பாளருமான லெனின், கதாநாயகி அஸ்மின், இசையமைப்பாளர் கைலாஷ் மேனன், குணச்சித்திர நடிகர் அனுமோகன், கதை ஆசிரியர் பொன் பார்த்திபன் மற்றும் பட குழுவினர் கலந்து கொண்டனர்.
அப்போது மேடையில் பேசிய கதை ஆசிரியர் பொன் பார்த்திபன், ” கதை ஆசிரியரே படத்தை இயக்கினால் நன்றாக இருக்கும் என பலரும் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், அதில் எனக்கு உடன்பாடில்லை. கடந்த காலங்களில் கே. பாக்யராஜ், மணிவண்ணன் போன்ற ஜாம்பவான்களே தங்களுடைய கதையினை வேறு ஒரு இயக்குநரிடம் கொடுத்து வெற்றி கண்ட பிறகு தான் இயக்குநராக மாபெரும் வெற்றியை பெற்றார்கள். அந்த வகையில் இந்த திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமையும்.” என்றார்.
படத்தின் கதாநாயகனும், தயாரிப்பாளருமான லெனின், ” ஒரு நல்ல திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்பதற்காக இந்த திரைப்படத்தை எடுத்து இருக்கிறேன். இதில் எனக்கு எந்தவிதமான லாபமும் கிடைக்க வேண்டாம். பொதுமக்கள் இந்த படத்தை திரையரங்கம் வந்து பார்க்க வேண்டும் என்கின்ற முனைப்போடு எடுத்திருக்கிறேன். 2023 இல் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் தற்பொழுது தான் வெளியாக உள்ளது. மேலும் காலம் தாழ்த்தினால் இந்த படத்தில் உள்ள பல காட்சிகள் பல திரைப்படங்களில் வந்துவிடும்.
மேலும், இந்தப் படத்தின் தலைப்பினை நாங்கள் படப்பிடிப்பு துவங்கும் முன்பாக பதிவு செய்திருந்தோம். திரைப்படம் வெளியாகும் பொழுது படத்தின் தலைப்பு வைக்கப் போனால், எங்களுக்கு ஓர் அழைப்பு வந்தது. அதாவது தலைப்பிற்கான கால அவகாசம் முடிந்துவிட்டது. புதிதாக அதனை புதுப்பிக்க வேண்டும் என கூறுகிறார்கள். அப்படி புதுப்பிப்பதற்கு இணையதளம் சார்ந்த வசதிகளை செய்தால் நன்றாக இருக்கும். தயாரிப்பாளர்கள் சங்கங்கள் அதனை முறைப்படுத்த கோரிக்கை வைக்கிறேன். அப்படி முறைப்படுத்த, முடியவில்லை என்றால் நானே அதை இலவசமாக செய்து கொடுக்கிறேன். இந்த காலகட்டத்தில் திரைப்படம் வெளியிடும் பொழுதே வெற்றி நடை போடுகிறது என்று போஸ்டர் டிசைன் செய்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. என்னுடைய திரைப்படம் உண்மையாகவே வெற்றி நடை போட்டால் அந்த சமயத்தில் நான் போஸ்டர் டிசைன் செய்து கொள்கிறேன்.” என்றார்.
நடிகர் அனுமோகன் பேசுகையில், ” எனக்கு ஜோதிடம் தெரிந்ததால் சொல்கிறேன். 2026 தமிழ் சினிமாவிற்கு நல்ல ஆண்டாக அமையும். ‘கிரீன் லேபிள்’ திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமையும்.” என்றார். அப்போது, படத்தின் தலைப்பை தவறாக சொல்கிறீர்கள் என மேடையில் அமர்ந்திருந்த படக்குழுவினர் சுட்டிக்காட்டினர்.
அதற்கு பதில் அளித்த அனுமோகன், ”எனக்கு கிரீன் லேபிள் தான். மதுப்பழக்கம் உள்ளவர்கள் வேண்டுமானால் ‘ரெட் லேபிள்’ என பெயர் வைத்துக்கொள்ளட்டும். என்னை பொறுத்தவரை இந்த திரைப்படம் கிரீன் லேபிள் தான்.” என நகைச்சுவையாக கூறினார்.
“வித் லவ் ( With Love )” படத்தின் முன் வெளியீட்டு விழா !
இந்நிகழ்வினில்.., இயக்குநர் தேசிங் பெரியசாமி பேசியதாவது.., சிவாஜி திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில்தான் தயாரிப்பாளர் மகேஷ்ராஜ் அவர்களை முதன்முறையாக சந்தித்தேன். அன்றிலிருந்து நாங்கள் நல்ல நண்பர்களாகிவிட்டோம். அப்போது இவர் இப்படியொரு திறமையான, முன்னணி தயாரிப்பாளராக வளர்வார் என்று நான் நினைக்கவே இல்லை, இப்போது அற்புதமான படங்கள் செய்கிறார். சௌந்தர்யா மேடம் இந்தப் படத்தை ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டுமென, ஒவ்வொரு அம்சத்தையும் பார்த்து பார்த்து செய்துள்ளார். அவரின் அந்த நேர்மை காரணமாகவே இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும். இயக்குநர் மதன் அவர்களின் முதல் படம் போலவே தெரியவில்லை. மிகச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். அபிஷந்த் அபாரமான நடிப்பை வழங்கியுள்ளார். எதிர்காலத்தில் அவர் ஒரு பெரிய ஹீரோவாக வருவார். அனஸ்வரா ராஜன் மிக அருமையாக நடித்துள்ளார் . ஷான் ரோல்டன் மிக அழகான இசையைத் தந்துள்ளார். படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பேசியதாவது.., வித் லவ் ஒரு பக்காவன ஹிட் திரைப்படம். அபிஷந்த் அனஸ்வரா ஜோடி, மிகவும் க்யூட்டாக இருக்கிறது. காவ்யா அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் படத்தின் எடிட்டிங் சிறப்பாக இருக்கிறது. அவரது முதல் படம் போலவே தெரியவில்லை. எடிட்டருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த திரைப்படம் நிச்சயம் மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்றார்.
இயக்குநர் சிபி சக்கரவர்த்தி பேசியதாவது.., படம் பார்த்துவிட்டேன் மிக அருமையாக உள்ளது. சௌந்தர்யா மேடம் பெரிய ஹீரோவை வைத்து இப்படத்தை எடுத்திருக்கலாம். ஆனால் அவர் இந்த புது டீமை நம்பி தயாரித்துள்ளார். தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் என்னிடம் இந்தப் படம் எப்படி இருக்கிறது என்று கேட்டார். நான் அவரிடம், படம் அருமையாக இருக்கிறது; பணம் மழையாகப் பொழியப் போகிறது என்று சொன்னேன். அதை கேட்ட உடனே தயாரிப்பாளர் கனவு காண ஆரம்பித்துவிட்டார். இயக்குநர் மதன் மிகவும் நம்பிக்கை தரும் இயக்குநராக இருக்கிறார். இன்றைய இளைஞர்கள் இந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையிலான படமாக இது இருக்கும் என்றார்.
லாக் டவுன் – விமர்சனம்
நாயகியாக அனுபமா பரமேஸ்வரன் தனது கேரக்டரை உள்வாங்கி நடித்ததில் அந்த கேரக்டராகவே மாறிப் போய் இருக்கிறார். கொரோனாவின் போது கருவை கலைக்க தனது தோழியுடன் டாக்டர் டாக்டராக பார்த்து அவமானப் படும் போடும் இடங்களில் மனசை பிழிந்து விடுகிறார். எப்படி கர்ப்பம் தரித்தோம் என்று தெரியாமலும் அதிலிருந்து வெளியே வர முடியாமல் ஏற்பட்ட தடைகளினாலும் தவித்துப் போகும் காட்சிகளில் அந்தத் தவிப்பை நடிப்பால் பார்வையாளர்களுக்கும் கடத்தி விடுகிறார்.
நாயகியின் பெற்றோராக வரும் சார்லி -நிரோஷா நடுத்தரக் குடும்பங்களைப் பிரதிபலிக்கும் பெற்றோராக நடிப்பில் பளிச்சிடுகிறார்கள்.
பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், லொள்ளு சபா மாறன், விநாயகராஜ், விது, சஞ்சீவி, பிரியா கணேஷ், ஆஷா என படத்தில் நிறையப் பேர். அத்தனை பேரும் தங்கள் கேரக் டர்களில் நின்று நிலைக்கிறார்கள். கொரோனா கால கட்டத்தின் அபாய சந்து பொந்துகள் வரை துல்லியமாக படம் பிடித்திருக்கிறது கே.ஏ.சக்திவேலின் கேமரா.
என்.ஆர்.ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். காட்சிகளுக்கு பொருத்தமான கனமான பாடல்கள் மனதில் தேங்கி விடுகின்றன. பின்னணி இசை நாயகியின் ஒவ்வொரு நாள் தவிப்பையும் இம்மி பிசகாமல் நமக்குள் இடப் பெயர்ச்சி செய்து விடுகிறது. எழுதி இயக்கியிருக்கிறார் ஏ.ஆர்.ஜீவா. இந்தக் கதையில் வரும் நாயகியின் வாழ்வா சாவா பிரச்சனை மட்டுமின்றி ஊரடங்கு காலத்தில் மக்களின் இக்கட்டான நிலையையும் கதைக்களத்தில் அழகுற இணைத்துக் கொண்டிருக்கிறார்.
அனுபமாவின் தோழியாக வரும் பிரியா வெங்கட் படபட பட்டாசாக பொரிந்து தள்ளி நம்மை கவர்கிறார். ஏமாற்றுப் பேர்வழியாக டாக்டருக்கு உதவும் கம்பவுண்டராக கொஞ்ச நேரமே வந்தாலும் மாறனின் காமெடி சீரியஸ் ஆக செல்லும் படத்தை கலகலப்பாக்குகிறது.
அனுபமாவுக்கு மாத்திரை தர யாருக்கும் அந்த கண்டிப்பான மெடிக்கல் ஷாப் இளைஞன் நம்மை கவர்கிறார். அதைவிட கருக்கலைப்பு செய்ய முன்வரும் அந்த டாக்டர் கதாபாத்திரமும் கடைசி பத்து நிமிடங்களில் நம்மிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவே செய்கிறது. நன்றாக நடித்திருக்கிறார்.
இந்த படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை படம் பார்ப்பவர்களை என்ன நடக்குமோ என்கிற தவிப்புடன் அமர வைத்திருக்கிறது. ‘ஹாட் ஸ்பாட் 2 மச்‘ படத்தின் வெற்றி விழா!
‘மங்காத்தா’வில் குறிப்பிடுவது போல் செந்தில் சார் இறுதியாக தான் வந்தார். வந்தவுடன் இப்படம் ஜனவரி 23 வெளியாகும் என்று சொன்னார். படம் வெளியானது. இப்படத்திற்கு வெற்றி விழா நடைபெறும் என்றார். அது தற்போது நடைபெறுகிறது.
கடைசியாக வந்த ஸ்டுடென்ட் போன்றவர் ராபின். அவுட் ஆஃப் சிலபஸில் இருந்து வந்து, அனைவரையும் வென்றுவிட்டார்.
விஜய் டிவி அமருக்கு நான் மிகப்பெரிய ரசிகன். படப்பிடிப்பு தளத்தில் அவர் பேசும் ஒவ்வொரு வசனங்களுக்கும் சிரித்துக் கொண்டே இருப்போம்.
இப்படி படக் குழுவினர் அனைவரும் மறக்க இயலாத அனுபவங்களை வழங்கியதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இந்த வெற்றி விழாவில் நடிகை சஞ்சனா திவாரி பேசுகையில், ” இந்த வெற்றி விழாவில் கலந்து கொண்டிருப்பதை மகிழ்ச்சியான தருணமாக கருதுகிறேன். ஹாட்ஸ்பாட் 2 மச் படத்தின் மீதும் அதில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் மீதும் ரசிகர்கள் அன்பு செலுத்துவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. என்னுடைய கதாபாத்திரத்திற்கு எப்படி வரவேற்பு கிடைக்கும்? என்று பதட்டத்துடன் இருந்தேன். இதற்காக எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் ,தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
நடிகை பவானி ஸ்ரீ பேசுகையில், ” இந்தப் படத்திற்கு ஊடகங்களும், பத்திரிகைகளும் வழங்கிய பேராதரவு படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. இதற்குப் பின்னர் ரசிகர்களும் திரையரங்கத்திற்கு வருகை தந்து தங்களுடைய வாய் மொழியால் படத்தை பாராட்டி கொண்டாடினர். மூன்று கதைகளுக்கும் பெரும் ஆதரவும் , வரவேற்பும் கிடைத்தது. எல்லா தரப்பு ரசிகர்களும் இப்படத்துடன் தங்களை இணைத்துக் கொண்டனர். இது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்தப் படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து எங்களுக்கு சாதகமாக பல விசயங்கள் நடைபெற்றிருக்கிறது. தற்போது கூட திருச்சி- தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் சொல்லியிருக்கிறார். இதை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நல்ல கன்டென்ட் இருந்தால் ரசிகர்கள் நிச்சயம் வரவேற்பு அளிப்பார்கள் என்பதற்கு இந்த படம் மீண்டும் ஒரு சாட்சியாகி, வெற்றி பெற்று இருக்கிறது இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.
இது போன்றதொரு வாய்ப்பை வழங்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் , தயாரிப்பாளர்கள், இணைந்து பணியாற்றிய சக நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
நடிகை பிரிகிடா சகா பேசுகையில், ” இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகி இருக்கும் மிகப்பெரிய வெற்றி படம் இது. எங்கள் திரைப்படத்திற்கு எவ்வளவு பெரிய வரவேற்பும், வெற்றியும் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
இதன் மூலம் தற்போது லைக் மைண்டட் பீப்புள் நிறைய பேர் வருகிறார்கள் என தெரிகிறது. இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இதனால் இப்படத்தில் நானும் பங்களிப்பு செய்திருக்கிறேன் என்பதில் சந்தோஷம். இதற்காக இயக்குநருக்கு நன்றி. ஒரு வெற்றி பெற்ற படத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் இந்த மேடையில் வீற்றிருக்கும் அனைவருக்கும் உள்ள எண்ணமாக இருக்கும்.
இந்த படத்தில் என் கதாபாத்திரத்தை பற்றி இயக்குநர் சொன்னபோது மிகவும் வித்தியாசமானதாக இருக்கிறதே..! ஏற்று நடிக்கலாமா? என முதலில் தயங்கினேன். இந்தப் படத்தில் ஒரு வசனம் வரும். ‘நான் ஒரு லெஸ்பியன் என்று ‘.. இதனை பேசும்போது முதலில் ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் உணர்வு உணர்வு தான். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக இதைப்பற்றி யாரும் பேச மாட்டார்கள். சமூகத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு மதிப்பீடு இருக்கிறது. ஆனால் இது குறித்து என் கேரக்டர் பேசி இருக்கிறது என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
உடலுக்குள் நடைபெறும் மாற்றத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும்… என்பதெல்லாம் நல்ல விசயமாக இருந்தது. அதேபோல் தம்பி ராமையா பேசும் வசனங்களும் ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இருந்தது.
இதெல்லாம் சமூகத்தில் நடைபெறும் விசயங்கள் தான். ஆனால் இதனை யாரும் பேச மாட்டார்கள். இயக்குநர் விக்னேஷ் கார்த்தி இது தொடர்பாக பார்ட் 1 எடுத்து, பார்ட் டூவும் எடுத்திருக்கிறார். இவை வெற்றி பெற்றிருக்கிறது என்றால்… ரசிகர்களின் விசாலமான மனதும் ஒரு காரணம். இதனை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தப் படத்திற்குப் பிறகு.. நான் இனி நடிக்கப் போகும் கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான நம்பிக்கையை எனக்குள் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் உருவாக்கியிருக்கிறார்.
உண்மையான லவ் கிடைக்காதா? என ஏங்கிக் கொண்டிருக்கும் 90ஸ் கிட்ஸ்களுக்கு இப்படத்தில் வரும் காதல் கதை மிகவும் பிடிக்கும். இதுவரை இந்தப் படத்தை பார்க்காதவர்கள் உடனடியாக திரையரங்கத்திற்கு சென்று படத்தைப் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
நடிகர் அஸ்வின் குமார் பேசுகையில், ” இறைவனுக்கு நன்றி. கடவுள் பல ரூபங்களில் வந்து என்னை பல தருணங்களில் காப்பாற்றி இருக்கிறார். நிறைய வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கிறார். நான் இந்த பிரபஞ்சத்தை முழுமையாக நம்புகிறேன். அவர்களில் ஒருவராக எனது நண்பராக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கை நான் பார்க்கிறேன்.
அவர் என்னை சந்தித்து இந்த படத்தில் இந்த கதையை நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் சொன்னார். அவரிடம் நான் ஏராளமான சந்தேகங்களை கேட்டுக் கொண்டே இருப்பேன். அவர் ஒவ்வொரு சந்தேகத்திற்கும் பொறுமையாக எனக்கு புரியும்படி விளக்கம் அளிப்பார். இந்தப் படத்தில் என்னுடைய அறிமுகக் காட்சியும் அவருடைய ஐடியா தான். நான் இயக்குநரை முழுமையாக நம்பி ஒப்படைத்து விட்டேன். இதற்காக அவருக்கு என்னுடைய முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மிகச்சிறந்த திறமைசாலி.
இந்தப் படத்தின் வெற்றி என்னுடைய ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது. இதற்காக நான் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படக் குழுவில் பணியாற்றிய அனைவரும் பாசிட்டிவ் எனர்ஜி கொண்டவர்கள். அவர்களால்தான் இந்த வெற்றி சாத்தியமாகி, இன்று நாங்கள் வெற்றி விழாவில் மகிழ்ச்சியுடன் ஒன்றிணைந்திருக்கிறோம். இதற்காக அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்திற்காக தயாரிப்பாளர் பேசிய சம்பளத்தை முழுமையாக வழங்கி விட்டார். நடிகராக தயாரிப்பாளர் வழங்கும் ஊதியம் என்பது எங்களுக்கு முக்கியமானது. அதற்காக தயாரிப்பாளருக்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்
தயாரிப்பாளர் – நடிகர் கே.ஜெ. பாலாமணி மார்பன் பேசுகையில், ” படம் வெளியாகி ஆறாவது நாளில் வெற்றி விழா கொண்டாடும் அளவிற்கு இப்படத்தை மக்கள் திரையரங்குகளில் பார்த்து கொண்டாடுகிறார்கள். வரவேற்றிருக்கிறார்கள். இதற்கு ஊடகங்களும், விமர்சனங்களும் எங்களுக்கு பேராதரவை அளித்ததுடன் ரசிகர்களை திரையரங்கிற்கு அழைத்து வந்தது. இதனால் படத்தை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாங்கள் இப்படத்தின் கதை மீது நம்பிக்கை வைத்திருந்தாலும் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. படம் வெளியான நான்கு நாட்களில் சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் 90 சதவீதத்திற்கும் மேலான பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு வருகை தந்திருந்தனர். தமிழகத்தின் தென்பகுதிகளில் 70 சதவீதத்திற்கும் மேலான பார்வையாளர்கள் திரையரங்குக்கு வருகை தந்திருந்தனர்.
அத்துடன் நாங்கள் இப்படத்திற்கான வரவேற்பு மெதுவாக நடைபெற்று அதன் பிறகு விரிவடையும் என எதிர்பார்த்தோம். ஆனால் படம் வெளியான இரண்டாவது நாளே அனைத்து திரையரங்குகளிலும் பார்வையாளர்கள் நிரம்பி வழிந்தனர்.
படம் வெளியான பிறகு நாங்கள் 15 திரையரங்குகளுக்கு ரசிகர்களின் வரவேற்பை காண சென்று இருந்தோம். அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் ரசனையும் , வரவேற்பும் ஒரே மாதிரியானதாக இருந்தது. இதன் மூலம் இப்படத்தை மக்கள் கொண்டாடுகிறார்கள் என்பதை நேரில் கண்டு மகிழ்ச்சி அடைந்தோம்.
இப்படத்தின் வெற்றிக்காக வழி விட்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அவர்களுக்கு இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கள் திரைப்படம் கிட்டத்தட்ட 200 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதனை சாத்தியப்படுத்திய விநியோகஸ்தர் ‘பைவ் ஸ்டார்’ செந்தில் மற்றும் அவரது குழுவினருக்கு எங்கள் நிறுவனத்தின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு அந்தப் படம் மட்டும் காரணம் அல்ல அந்தப் படம் வெளியாகும் சூழலும் ஒரு முக்கிய காரணம். இருப்பினும் இந்தப் படத்தின் வசூலைக் கடந்து படம் வெற்றி பெற்றதற்காக ரசிகர்களின் வரவேற்பினை பெற்றதற்காக குடும்பம் குடும்பமாக நண்பர்களுடன் அனைவரும் இணைந்து திரையரங்கத்திற்கு இந்தப் படத்தை பார்க்க வருகிறார்கள் என்றால்.. அதற்கு இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தன்னுடைய பங்களிப்பை 100 சதவீதம் வழங்கியிருக்கிறார் என்பதை நான் பெருமிதத்துடன் சொல்கிறேன். இதற்காக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தை இதுவரை பார்க்காதவர்கள் விரைவில் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து எங்களுக்கு தொடர் ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் ” என்றார்.
இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசுகையில், ” ஹாட்ஸ்பாட் டூ மச் படம் வெளியாகி இன்றுடன் ஆறு நாள் ஆகிறது. அதற்குள் ஏன் சக்சஸ் மீட்? என கேட்டார்கள். ஹாட்ஸ்பாட் படத்தின் முதல் பாகம் குறைவான திரையரங்குகளில் வெளியாகி, ஐந்து வாரங்கள் வெற்றிகரமாக ஓடியது. பெரும் வரவேற்பும் இருந்தது. ஹாட்ஸ்பாட் படத்தின் முதல் பாகத்தின் ஒட்டுமொத்த வசூல் எவ்வளவோ.. அதைவிட இரண்டு மடங்கு இப்படம் வெளியான நான்கு நாளில் வசூலித்திருக்கிறது. அந்த வகையில் இந்தப் படம் எங்களுக்கு வெற்றி தான். அதனால் தான் இந்தப் படத்திற்கு ஆறாவது நாளில் நம்பிக்கையுடன் வெற்றி விழாவை ஒருங்கிணைத்திருக்கிறோம். இந்த வெற்றிக்கு காரணமான ரசிகர்கள்- ஊடகங்கள் – விநியோகஸ்தர்கள்- திரையரங்கு உரிமையாளர்கள் – உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தில் என்னுடன் பணியாற்றிய படத்தொகுப்பாளர் – ஒளிப்பதிவாளர்கள்- கலை இயக்குநர் – இசையமைப்பாளர் – தயாரிப்பு நிர்வாகி – நடிகர்கள் ராபின், அஸ்வின் குமார், ஆதித்யா பாஸ்கர் ரக்சன், பிரியா பவானி சங்கர், ஆதித்யா கதிர், பவானி ஸ்ரீ, பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி மற்றும் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய எல்லா திரைப்படங்களிலும் முதல் நன்றி ‘குறிஞ்சி’ என்பவருக்கு இருக்கும். இவர்தான் 2013 ஆம் ஆண்டில் எனக்கு இரண்டு லட்ச ரூபாயை கொடுத்து ‘முதல் கனவே’ எனும் என்னுடைய முதல் குறும்படத்தை தயாரித்தவர். அவர் கொடுத்த ஊக்கம் தான் இன்று ஹாட்ஸ்பாட் டூ மச் வரை தொடர்கிறது. அவருக்கு நன்றி தெரிவிப்பது என்னுடைய அனைத்து படங்களிலும் தொடரும்.
இப்படத்தின் விமர்சனங்களில் நாங்கள் இரண்டு குறிப்பிட்ட நட்சத்திரங்களின் ரசிகர்களைத்தான் சுட்டிக் காட்டி இருக்கிறோம் என்று இடம்பெற்று இருந்தது. இது தவறு. பொதுவாகவே ரசிகர்களைப் பற்றிய பார்வை தான் இது. அதனை இரண்டு நட்சத்திரங்களின் வழியாக சொன்னால் நன்றாக இருக்கும் .. எளிதாக புரியும் என்பதாகத்தான் விவரித்து இருக்கிறோம்.
டோனி ரசிகர்கள் கோலியை வசைபாடுவதும், கோலியின் ரசிகர்கள் தோனியை வசை பாடுவதும் இணையத்தில் தொடர்கிறது. ஒரு இசை அமைப்பாளரின் ரசிகர்கள் மற்றொரு இசையமைப்பாளரை விமர்சிக்கிறார்கள். இவை அனைத்தையும் ஒன்றிணைத்து தான் நாங்கள் ரசிகர்களின் கோணத்தில் அவர்களுடைய உணர்வாக பேசி இருக்கிறோமே தவிர.. குறிப்பிட்ட இரண்டு நட்சத்திரங்களின் ரசிகர்களை பற்றி நாங்கள் ஒருபோதும் எங்கும் குறிப்பிடவில்லை.
அதே சமயத்தில் தம்பி ராமையா பேசும் வசனங்கள் தொடர்பாகவும் இணையத்தில் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் விமர்சனங்கள் இடம் பிடித்திருக்கிறது. ஒரு படம் பிடித்திருக்கிறது என்பதும் ஒரு படம் பிடிக்கவில்லை என்பதும் படத்தை பார்த்த ஒவ்வொரு ரசிகர்களின் தனிப்பட்ட கருத்து. இதை நாங்கள் மதிக்கிறோம். வரவேற்கிறோம். ஆனால் பெண்ணியவாதிகள் சிலர் தங்களின் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் இவர்கள் இந்த திரைப்படத்தை முழுமையாக பார்க்காமல்.. இணையத்தில் வெளியான துண்டு காணொளிகளை மட்டும் பார்வையிட்டு சில சூடோ ஃபெமினிஸ்ட்டுகள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள். இது தவறு. அவர்கள் இந்தப் படத்தை முழுமையாக பார்த்துவிட்டு தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு படைப்பை பற்றிய விமர்சனங்களை முன் வைப்பதற்கு எப்படி பார்வையாளர்களுக்கு முழு உரிமை இருக்கிறதோ… அதே போல் ஒரு படைப்பை எப்படி வழங்கிட வேண்டும் என்பதில் படைப்பாளனாகிய எனக்கும் முழு உரிமை உள்ளது.
நான் என்னுடைய மனசாட்சிக்கு உட்பட்டு எனக்குத் தெரிந்த வகையில் நிறைய மக்களுடன் விவாதித்து அதனை எப்படி குழப்பம் இல்லாமல் தெளிவாக மக்களுக்கு வழங்கிட இயலும் என்பதையும் எப்படி சமூக பொறுப்புடன் இதனை சொல்ல வேண்டும் என்பதையும் மனதில் வைத்து தான் இந்த படைப்பை உருவாக்கி இருக்கிறேன். ஒரு படைப்பாளனாக ஒரு படைப்பை உருவாக்குவதற்கு எனக்கு முழு சுதந்திரமும், உரிமையும் உண்டு என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்” என்றார்.
ஹாட் ஸ்பாட் 2 மச் ‘ படத்தில் அஸ்வின் குமார், பிரியா பவானி சங்கர், எம். எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, ஆதித்யா பாஸ்கர் , ரக்சன், பவானி ஸ்ரீ , பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி, ‘ஆதித்யா’ கதிர், விஜய் டிவி அமர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் ரவி – ஜோசப் பால் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்திருக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாரான இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களுடைய பேரன்பினையும் பேராதரவையும் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். பல வருடங்களுக்கு பிறகு கிடைத்த வெற்றி : TTT சக்சஸ் மீட்டில் நெகிழ்ந்த ஜீவா
இயக்குனர் ஆர்.கே செல்வமணி மேடையில் பேசுகையில்,”கடந்த ஆண்டு இறுதியில் வெளியான ‘சிறை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாறியது. இந்த ஆண்டு துவக்கத்தில் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் வெற்றிப்படமாக உருவெடுத்துள்ளது. இந்த தயாரிப்பாளர் போல பல தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவிற்கு தேவை. அப்பொழுதுதான் தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கும்” என்றார்.
தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் போது, “நேரமின்மை காரணமாக இந்த திரைப்படத்தை நான் இன்னும் பார்க்க முடியவில்லை. தம்பி ஜீவாவை பொறுத்தவரை, சண்டைக் காட்சி, காதல் காட்சி, சோகக் காட்சி அனைத்தும் சிறப்பாக நடிக்க கூடியவர். நல்ல கதையில் யார் நடித்தாலும் படம் ஓடும். டூரிஸ்ட் ஃபேமிலி, சிறை மாதிரி திரைப்படம் வருவது தமிழ் சினிமாவில் அருமை. இந்த படத்திற்கு நல்ல தலைப்பு வைத்து இருக்கிறார்கள்” என்றார்.
இயக்குனர் பார்த்திபன் பேசும் போது, “இந்த படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி, மன்னர் போல செயல் பட கூடியவர். யாருக்கு எப்படி உதவி செய்ய வேண்டும் எப்போதும் நினைத்து கொண்டு இருப்பவர். இவரைப் போன்ற தயாரிப்பாளர்கள் இருப்பது தமிழ் சினிமாவிற்கு கூடுதல் பெருமை சேர்க்கும்” என்றார்.
நடிகர் ஜீவா பேசியபோது, “எனக்கு தமிழ் இயக்குனர்கள் கொடுக்காத பெரிய வெற்றியை இந்தப் படத்தின் இயக்குனர் கொடுத்து உள்ளார். இந்த படத்துல நடிச்ச எல்லாரும் சூப்பரா அவங்களோட முழு உழைப்பையும் போட்டு இருக்காங்க. அதனாலதான் இந்த படம் வெற்றி பெற்றிருக்கு. இந்த நேரத்தில் இயக்குநர் நிதீஷ் சகாதேவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது அப்பா ஆர்.பி. செளத்ரி தான் தயாரிப்பாளர்களின் ரியல் ஓ.ஜி” எனக் கூறினார்.
அப்போது அவர் அருகே வந்த நடிகர் ஜீவாவின் தந்தையும், தயாரிப்பாளருமான ஆர்.பி செளத்ரி, “ஜீவா எனக்கு ஒரு BMW காரை கிப்ட் பண்ணி இருக்கான். அவனுக்கு நான் ஒரு கிப்ட் தரணும்” எனக் கூறி என ஜீவாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்து அவரை வாழ்த்தினார். ‘கருப்பு பல்சர்’ விமர்சனம்
டார்க் காமெடி வகையறா கதாபாத்திரம் மன்சூருக்கு. படம் முழுக்க சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறார். வில்லனாக ஆர்ஜையும் தன் பங்கை சரியாக செய்திருக்கிறார். காமெடி என்ற பெயரில் ஃபிராங்க் ஸ்டார் ராகுல் சில இடங்களில் ரசிக்க செய்திருக்கிறார்.
ஜல்லிக்கட்டு காட்சியில் தனது கைவண்ணத்தை காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் பாஸ்கர் ஆறுமுகத்திற்கு பாராட்டுகள். இன்பாவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
கதை எழுதி இயக்கியிருக்கிறார் முரளி கிரிஷ். இயக்குநர் ராஜேஷ் எம்மின் சீடரான இவர், குருவின் பாதையிலேயே காமெடி தூக்கலான கதையை தேர்வு செய்து இயக்கியிருக்கிறார். மண் சார்ந்த கருவை தொட்டதற்காகவே பாராட்டலாம். குறைந்த முதலீட்டில் குறுகிய நாட்களில் ஒரு படத்தை முடித்திருக்கும் திறமைக்கு சபாஷ். 











