C வெங்கடேசன் தயாரிப்பில், விதார்த் நடிப்பில், இயக்குநர் V கஜேந்திரன் இயக்கத்தில், விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “மருதம்”. வித்தார் , ரக்ஷனா , அருள்தாஸ் , மாறன் , தினந்தோறும் நாகராஜ் , சரவண சுப்பையா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். என்.ஆர் ரகுநந்தன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தனது சொந்த நிலத்தில் இயற்கை முறைப்படி விவசாயம் செய்து மனைவி மற்றும் மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் நாயகன் வித்தார்த். எப்படியாவது தனது மகனை பெரிய தனியார் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக நிலத்தை அடமானம் வைத்து பணத்தை ஏற்பாடு செய்கிறார். இப்படியான நிலையில் வித்தார்த்தின் நிலத்தை வேறு ஒருவர் வங்கி ஏலத்தில் வாங்கியதாக கூறி அந்த நிலத்தை கைபற்றுகிறார். விசாரிக்கையில் வித்தார்த்தின் இறந்த தந்தை வங்கியில் லோன் வாங்கியதாகவும் அந்த கடனை அடைக்காததால் நிலம் ஏலத்தில் விடப்பட்டதாகவும் கூறுகிறார்கள். இதில் ஏதோ சதி இருப்பதை உணரும் வித்தார்த் தனது நிலத்திற்காக போராடுகிறார். அவர் தனது நிலத்தை மீட்டாரா தனது மகனை தனியார் பள்ளியில் சேர்த்தாரா என்பதே மருதம் படத்தின் கதை.
அப்பாவி விவசாயிகள் ஏமாற்றப்பட்டு அவர்களின் நிலங்கள் பறிக்கப்படுவது , கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது என விவாசாயிகளின் பிரச்சனைகளை நாயகனின் வழி பேசுகிறது மருதம் படம். தனது நிலத்திற்கு சொந்தக்காரனாக இருந்தபோதும் அது கைவிட்டுப் போனப்பின் நாயகன் கன்னியப்பனின் வாழ்க்கை தலைகீழாக புரள்வதை படிப்படியாக காட்டப்படுகின்றன. பெரியளவில் திருப்பங்க்ளும் ட்விஸ்டும் இல்லாமல் சொல்லப்படுவதால் கதை தொய்வடைகிறது என்றாலும் வித்தார்த்தின் நடிப்பு படத்தை தாங்கி நிற்கிறது. தனது நிலத்தை மீட்க வழக்க தானே வாதாடு காட்சிகள் இன்னும் சுவாரஸ்யமாகவும் விறுவிறுபபகவும் கையாளப்பட்டிருக்கலாம். நாயகிக்கி வீட்டு வேலைகள் செய்வதும் கணவனுக்கு ஆறுதல் சொல்வதை தவிர கூடுதலாக ரோல் இருந்திருக்கலாம். மாறனின் ஒரு சில நகைச்சுவை துணுக்குகள் எதிர்பார்க்காத நேரத்தில் வெடித்து சிரிக்க வைக்கின்றன
கதையில் பெரியவில் உணர்ச்சிகள் இருந்தாலும் இன்னும் கூடுதல் திரைமொழி கைகூடியிருந்தால் மருதம் சிறப்பான அனுபவமாக அமைந்திருக்கும்





















