கண்ணை நம்பாதே, இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மு மாறன். இவர் அடுத்ததாக பிளாக் மெயில் என்ற படத்தினை இயக்கியிருக்கிறார். இப்படத்தில்., ஜிவி பிரகாஷ், தேஜு அஸ்வினி, ஸ்ரீகாந்த், பிந்து மாதவி, லிங்கா, முத்துக்குமார், ரெட்டின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரிப்பிரியா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
படத்தினை தயாரித்திருக்கிறார் ஜெயக்கொடி அமல்ராஜ். சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
முத்துக்குமாரிடம் லோடு ஆட்டோ ஓட்டுகிறார் ஜிவி பிரகாஷ். முத்துக்குமார், ஜிவிக்கு தெரியாமல், அந்த வாகனத்தில் போதைப்பொருளை கடத்த, ஆட்டோவை மர்ம நபர் ஒருவர் கடத்தி விடுகிறார்.
கடத்தல் பொருள் அல்லது அதற்கான பணம் வராமல், உன் காதலியை விட மாட்டேன்று என்று ஜி வி பிரகாஷிடம் கூறி விடுகிறார் முத்துக்குமார்.
தனது காதலியைக் காப்பாற்ற, பெரும் செல்வந்தரான ஸ்ரீகாந்தின் குழந்தையை கடத்தி, அதன் மூலம் ப்ளாக்மெயில் செய்து பணத்தைப் பெற ப்ளான் போடுகிறார் ஜிவி. குழந்தையை கடத்த செல்லும் போது, அங்கு குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சியாகிறார் ஜிவி.
அதன்பிறகு என்ன நடந்தது.? என்பதே படத்தின் மீதிக் கதை.
கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் சரியாக கொடுத்து, அக்கதாபாத்திரத்திரமாகவே வாழ்ந்துவிட்டுச் செல்பவர் தான் ஜி வி பிரகாஷ். இப்படத்திலும் அதை அளவாக செய்து, கதைக்கேற்ற நாயகனாக மிரட்டியிருக்கிறார்.
நாயகி தேஜூ, அழகாக வந்து தனது நடிப்பைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். அவரை இன்னும் பயன்படுத்தியிருந்திருக்கலாம்.
ஸ்ரீகாந்த், பிந்து மாதவி, முத்துக்குமார், ரெடின் கிங்க்ஸ்லி, லிங்கா, ரமேஷ் திலக் உள்ளிட்ட சீனியர் நடிகர்களும் தங்களது நடிப்பை அளவாக கொடுத்துவிட்டுச் சென்றிருக்கின்றனர்.
இதற்கு முன் தான் எடுத்த படங்களைக் காட்டிலும், இப்படத்தின் திரைக்கதையை அதிவேகமாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் மு மாறன்.
அடுத்து என்ன நடக்கும் அடுத்து என்ன நடக்கும் என்று நம்மை கதையின் பின்னால் ஓட வைத்துக் கொண்டே இருந்தார் இயக்குனர்., குழந்தை தொடர்ச்சியாக கடத்தப்பட்டுக்கொண்டே இருந்த சம்பவம் தான் சற்று ரிப்பீட் மோட் ஆக தெரிந்ததே தவிர, ஒரு தரமான சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தினை விரும்பும் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு சரியான தீணிதான்.
ப்ளாக்மெயில் – வேகம்..



















