கார்த்திக் கட்டம் நேனி இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, மனோஜ் மன்ச்சு, ஸ்ரேயா சரண், ரித்திகா நாயக், ஜெகபதிபாபு, ஜெயராம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் மிராய்.
படத்தினை தயாரித்திருக்கிறார்கள் டி ஜி விஷ்வ பிரசாத், கிரித்தி பிரசாத். மேலும், இசையமைத்திருக்கிறார் கௌர ஹரி. ஒளிப்பதிவு செய்திருக்கிறார் கார்த்திக்கட்டம் நேனி.
அரசர்களில் பேரரசனாக திழந்தவர் அசோக மன்னர். இவர் பல நாடுகளின் மீது படையெடுத்து பெரும் வீரனாக திகழ்ந்து வந்தார். அப்போது, அவருக்கு ஒரு அபூர்வ சக்தி ஒன்று கிடைத்தது.
அந்த சக்தியை பயன்படுத்தி ஒன்பது புத்தங்களை தயார் செய்து அந்த சக்திகளை அந்த புத்தகங்களில் வைத்தார். ஒன்பது புத்தகங்களையும் ஒன்பது வீரர்களிடம் ஒப்படைக்கிறார் அசோகன்.
காலங்கள் கடக்க, வில்லனான மனோஜ் மஞ்சு 9 புத்தகங்களை அடைந்தால் அபூர்வ சக்தி கிடைத்து, மக்களை கொன்று குவிக்கலாம் என்ற எண்ணத்திலிருக்கிறார். அதற்காக ஒவ்வொரு புத்தகங்களாக கைப்பற்றி வருகிறார் மனோஜ் மஞ்சு.
இந்நிலையில், ஸ்ரேயா தனது குழந்தையை சிறுவயதிலேயே ஒரு இடத்தில் விட்டுவிட்டுச் சென்று விடுகிறார். அனாதையாக வளரும் அவரே நாயகன் தேஜா சஜ்ஜா.
இமயமலையிலிருந்து வரும் பெண் ஒருவர், மனோஜ் மஞ்சுவின் எண்ணத்தை தேஜா சஜ்ஜாவிடம் கூறுகிறார். ஒன்பதாவது புத்தகத்தை அடைந்தால், மனோஜ் மஞ்சுவை யாராலும் அழிக்க முடியாது என்றும் கூறுகிறார்.
மனோஜ் மஞ்சுவை அழிப்பதற்காக மிராய் என்ற ஆயுதத்தைத் தேடி செல்கிறார் தேஜா. இறுதியில் மிராய் ஆயுதத்தை தேஜா கைப்பற்றினாரா.? மனோஜ் மஞ்சுவை எப்படி கொலை செய்கிறார்.? என்பதே படத்தின் மீதிக் கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கிறா தேஜா சஜ்ஜா. இவர், அனுமன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். முழுக்க முழுக்க இறைவனை மையப்படுத்தியே இவரது படைப்புகள் வந்து கொண்டிருக்கிறது. வட இந்தியாவில் அதிகமாக வணங்கக்கூடிய ராமரை மைப்படுத்தியே இப்படம் உருவாகியிருக்கிறது.
கடந்த சில வருடங்களாக ராமரை மைப்படுத்தி தென்னிந்திய சினிமாக்கள் அதிகமாக வருவதை பார்க்க முடிகிறது. ராமரை வணங்குபவர்கள் வணங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், அதையே பெரிதாக சினிமாவாக எடுத்து அதில் வியாபாரம் செய்யக்கூடிய யுக்தி சில காலமாக அரங்கேறி வருகிறது.
குறிப்பாக, தென்னிந்திய மக்களிடையே முருகர், பெருமாள், அம்மன் இப்படியான கடவுகள்கள் வணங்கப்பட்டு வரும் நிலையில், எதற்காக இவர்கள் ராமர் கடவுளை மட்டும் தூக்கிப் பிடிக்க வேண்டும்.
வழக்கமான சூப்பர் மேன் படமாக இப்படமும் இருக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகளில் அதிகப்படியான செலவுகளை செய்து படத்தினை பிரம்மாண்டமாக்கியிருக்கிறார்கள்.
அந்த பிரம்மாண்டத்திற்காக படத்தினை ஒருமுறை பார்க்கலாம்.




















