குமார சம்பவம் – விமர்சனம்

0
92

யக்கம்: பாலாஜி வேணுகோபால்

நடிப்பு: குமரன் தியாகராஜன், பயல், ஜி எம் குமார், குமரவேல், பால சரவணன், வினோத் சாகர், முன்னா சிவா, லிவிங்க்ஸ்டன், அரவிந்த்

தயாரிப்பு: கே ஜி கணேஷ்

இசை: அச்சு ராஜாமணி

ஒளிப்பதிவு: ஜெகதீஷ்

தயாரிப்பு நிறுவனம்: Venus Infotainment K.J.Ganesh

கதைப்படி,

குமரன் தியாகராஜனின் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் குமரவேல், திடீரென இறந்துவிடுகிறார். இது கொலையா அல்லது தற்கொலையா என்று போலீஸ் விசாரணை நடத்த வருகின்றனர்.

ஒரு மாதத்தில் வீட்டினை விற்று, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து படம் இயக்க இருக்கும் நிலையில், இப்படி ஒரு சம்பவம் நடந்ததை எண்ணி கலங்குகிறார்.

 

தொடர்ந்து, போலீஸ் விசாரிக்க குமரனின் குடும்பத்தின் மீது போலீஸ் சந்தேகப் பார்வையை வீசுகிறது.

இது கொலையா தற்கொலையா.? இயக்குனராக ஆக வேண்டும் என்ற குமரனின் கனவு நனவானதா இல்லையா.? என்பதே படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனாக குமரன் தியாகராஜன், அருமையான ஒரு நடிப்பை வழங்கியுள்ளார். கதைக்கு என்ன தேவையோ அதை அளவாக கொடுத்திருக்கிறார். காமெடியும் இவருக்கு நன்றாகவே வொர்க் அவுட் ஆகியுள்ளது.

இரண்டாம் நாயகனாக குமரவேல், புரட்சி போராட்டம், சமூக சிந்தனை என ஒரு போராளியாக வாழ்ந்திருக்கிறார். இவர் பேசும் வசனங்கள், இவர் தொடுக்கும் வழக்குகள் பல இன்னமும் தமிழகத்தில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

சீனியர் நடிகரான ஜி எம் குமார் தனது அனுபவ நடிப்பை வழங்கியுள்ளார். குமரனின் தங்கையாக நடித்தவர், காதலியாக நடித்த பயல் என இருவருமே அழகான நடிப்பை வழங்கியுள்ளனர்.

இரண்டாம் பாதியில் பாலசரவணன், வினோத் சாகர் இருவரும் தங்களது நடிப்பில் பட்டையை கிளப்பியிருக்கிறார்கள்.

படத்தின் ஒட்டுமொத்த பலமே இரண்டாம் பாதி தான். முழுக்க முழுக்க காமெடிக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து படத்தினை இயக்கியிருக்கிறார் இயக்குனர். க்ளைமாக்ஸில் நல்லதொரு மெசேஜையும் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார் இயக்குனர்.

காமெடி கலந்து கருத்தாக படம் நகர்வது சற்று விறுவிறுப்பு தான்.

இரண்டாம் பாதியில் கொடுத்த முக்கியத்துவத்தை முதல் பாதியிலும் கொடுத்திருந்திருக்கலாம்.

இசை மற்றும் ஒளிப்பதிவு இரண்டுமே படத்தில் அளவாக பேசியிருக்கிறது.

குமார சம்பவம் – காமெடி சம்பவம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here