ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், கார்த்தி, கிரித்தி ஷெட்டி, ராஜ்கிரண், சத்யராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வா வாத்தியார்’.
இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
இதற்கு முன்பு இப்படத்தை , இந்த வருட பொங்கலுக்கு வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், பொங்கலுக்கு படம் வெளியாகவில்லை. வருடக் கடைசியில் வரவிருந்த படம் இப்போது வருடக் கடைசியில் வருகிறது.
இந்தப் படம் தவிர கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ படமும் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது.






















