கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்து, தனது தனித்துவமான மற்றும் வசீகரிக்கும் குரலாலும் நடிப்பாலும் அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்தவர் நடிகர் அர்ஜூன் தாஸ்.
இப்படத்திலிருந்து அவருக்கு அடுத்தடுத்த படங்களில் பெரிதாகவே வாய்ப்பு கிடைத்த, அவர் அதனை கெட்டியாக பிடித்தும் கொண்டார்.
இதற்கு அடுத்தபடியாக, அந்தகாரம் மற்றும் அநீதி உள்ளிட்ட படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த இவர், தமிழ் சினிமாவின் உட்ச நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித்துடன் மாஸ்டர் மற்றும் குட் பேட் அக்லி என்ற படத்தில் வில்லனாக நடித்து, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக வளர்ந்து நின்றார்.
தொடர்ச்சியாக, தனது கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த இவர், அடுத்ததாக விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவான பாம்ப் படத்தில் நடித்திருந்தார்.
இப்படம், இன்று உலகம் முழுவதும் வெளியானது. நேற்றைய தினம், ஸ்பெஷல் ப்ரீமியர் திரைக்காட்சி காட்சியிடப்பட்டது. அதில், படத்தினை பார்த்த மக்கள் அனைவரும் அர்ஜூன் தாஸின் நடிப்பை வெகுவாக பாராட்டினர்.
அதுமட்டுமல்லாமல், இப்படியான கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்காகவே அவரை பாராட்ட வேண்டும் என்றும் கூறினர்.
வழக்கமான ஆக்சன் சினிமாக்களிலிருந்து வேறுபட்டு அர்ஜூன் தாஸ் புதுமையான கதாபாத்திரத்தில் நடித்து, கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
தொடர்ந்து இவரின் படங்கள் தேர்வு அனைவரையும் வியக்க வைக்கிறது.
வாழ்த்துகள் அர்ஜூன் தாஸ்…





















