சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் தேர்தலுக்கு முன்னதாக அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு வர இருக்கிறது. பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அறிக்கை அளிக்க ககன்தீப் சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழு செப்டம்பர் 30ஆம் தேதி முதலமைச்சரிடம் அறிக்கை அளிக்க இருக்கிறது. அதற்கு பிறகு பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தினர்.
திமுக ஆட்சி என்றாலே அரசு ஊழியர்களுக்கு ஆதரவான அரசு என்பதுதான் பல ஆண்டுகளாக தமிழகத்தில் சொல்லப்படும் கருத்து. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி தற்போது ஸ்டாலின் வரை அரசு ஊழியர்கள் திமுக அரசுக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள்
அந்த வகையில் 2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் பறிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை செய்துள்ளதாக அதிமுகவினர் சொல்லி வருகின்றனர்.





















